×

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்

திருமலை: தெலங்கானா மாநிலம் வாரங்கல் மக்களவை தொகுதியில் மே 13ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக முடிந்ததால் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கி, சிறப்பு விருந்தளிக்க ஜாங்கன் மாவட்ட கலெக்டர் ரிஸ்வான் பாஷா ஷேக் நேற்று ஏற்பாடு செய்தார். இதனை கலெக்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டார். இது திருமணம் அல்லது விழா அல்ல. இது தேர்தல் பண்டிகை கொண்டாட்டம். ஜங்கான் மாவட்டத்தில் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு பாலகுர்த்தியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு கலெக்டர் சைவ விருந்து பரிமாறினார்.

The post தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Jhangan District ,Collector ,Rizwan Pasha Sheikh ,Warangal Lok Sabha ,Dinakaran ,
× RELATED டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு