- உச்ச நீதிமன்றம்
- மோடி
- புது தில்லி
- மக்களவை
- வாரணாசி
- தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
- ஜனாதிபதி
- Ayyakannu
- தின மலர்
புதுடெல்லி: மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் வாரணாசியில் மே 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘வாரணாசியில் விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை வரும் 20ம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வாரணாசிக்கு விவசாயிகள் வர ரயில் வசதி செய்து தருவதற்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post வேட்பு மனு விவகாரம் மோடிக்கு எதிரான வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.