×

ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலை அருவிக்கு வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேனி: தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்டார்கள். ஆண்டிபட்டி வட்டம் கொம்பைத்தொழு அருகே வனப்பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மட்டுமன்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் மேகமலை அருவிக்கு பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை கொம்பைத்தொழு மற்றும் மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. உடனடியாக சுதாரித்த வனத்துறையினர் மேகமலை அருவி நோக்கி சென்று கொண்டிருந்த 20 பயணிகளை எச்சரித்து மீட்டார்கள். வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை வெளியேற்றியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்தில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவி இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியது. வனப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் வனத்துறையினர் மேகமலை அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலை அருவிக்கு வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Antipatti Meghamalai Falls ,Meghamalai Falls ,Theni ,Andipatti Circle, Kombaitholu ,Dindigul ,Antipatti Meghamalai waterfall ,Meghamalai waterfall ,Dinakaran ,
× RELATED மேகமலை அருவியில் 3 நாட்களுக்குப் பின் மீண்டும் குளிக்க அனுமதி