×

ஆண்டவர் ஆலய தேர் திருவிழா

கமுதி, மே 15:கமுதி அருகே திருச்சிலுவைபுரம் கிராமத்தில் 90 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு வருடம் தோறும் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருவிழா திருப்பலி நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு திருவிழா திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று இரவு முழுவதும் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் ஆண்டவர் தேர் முன் செல்ல, பின்னே ஜெபஸ்தியர் தேர், வியாகுல அன்னை மற்றும் விண்ணேற்பு ஆண்டவர் தேர் சென்றது.

The post ஆண்டவர் ஆலய தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Lord Temple Chariot Festival ,Kamudi ,Trichiluvaipuram ,Vinnelupu Andavar Church ,
× RELATED கோயில் கும்பாபிஷேக விழா