- தெற்கு
- Tarapuram
- திருப்பூர் மாவட்டம்
- தாராபுரம் மூலனூர் குண்டம்
- தாராபுரம்
- வருவாய் ஆணையர்
- செந்தில்
- தின மலர்
தாராபுரம், மே 15: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தாராபுரம் மூலனூர் குண்டடம் உள்ளிட்ட தாலுகா பகுதி முழுவதும் உள்ள மாணவர்கள் பயணம் செய்யும் தனியார் பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில் குமார் திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார், காவல் ஆய்வாளர் ரவி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வருவதற்கு பயன்படுத்தப்படும் 184 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா?, கதவுகள் சரியாக இயங்குகிறதா?, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா?, அவசர கால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா?, பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
வாகன ஓட்டுனர்களின் உரிமம் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது. அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். மொத்தம் 184 வாகனங்கள்
சரியாக உள்ள வாகனங்கள், 117 குறைபாடு உள்ள வாகனங்கள், 26 மோட்டார் வாகன பணிமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, 3 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன என வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தெரிவித்தனர்.
பள்ளி வாகன வருடாந்திர ஆய்வின் போது வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர்களின் உதவியாளர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர், மோட்டார் வாகன வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் நிகழ்ச்சி அறிவுரை வழங்கி பேசியதை கேட்டு தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் அவசர காலங்களில் மீட்புப் பணிகளை எப்படி செய்வது என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்கம் செய்ததை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தெற்கு தொகுதிக்கு ரூ.64 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.