×

உளவுத்துறையின் ரிப்போர்ட்டால் அதிர்ச்சி; பாஜ தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

திருப்பத்தூர்: பாஜ ேதால்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். திருப்பத்தூர் ரயில்நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட, வட்டார, பேரூர், கிராம கமிட்டிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
379 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்திருக்கிறது. உளவுத்துறையின் ரிப்போர்ட் படி பெரும் தோல்வியை பாஜ சந்திக்கும் என கொடுத்திருக்கிறது. தோல்வி பயத்தால் நாட்டில் பெரும் கலவரத்தை நடத்த வேண்டும் என்று பாஜ கட்சி துடித்துக்கொண்டிருக்கிறது. எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று டெல்டா பகுதியில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் வாரணாசிக்கு செல்ல முயன்றார்கள். அங்கு செல்ல முற்பட்டவர்களை ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தியதை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ராகுல்காந்தி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று தமிழக முதல்வரே கூறி உள்ளார். அனைவருக்கும் புரியும். நாங்கள் யார் பிரதமர் என்று முடிவு எடுக்கவில்லை. திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் படுகொலை செய்தவர்களை காவல் துறையினர் 10 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். காவல்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அண்ணாமலை பேசுவதை மக்களே தடுத்து நிறுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post உளவுத்துறையின் ரிப்போர்ட்டால் அதிர்ச்சி; பாஜ தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirupattur ,Congress ,president ,Selvaperunthagai ,Congress Committee ,Tirupathur Railway Station Road ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர்: தனியார் பள்ளியில் புகுந்த சிறுத்தை