×

டெல்லியில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி

புதுடெல்லி: டெல்லியில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் மீட்கப்பட்டனர். எனினும் ஒருவர் உயிரிழந்தார். டெல்லியின் ஐடிஓ பகுதியில் பழைய போலீஸ் குடியிருப்புக்கு எதிரே வருமான வரித்துறை அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு வருமான வரித்துறையின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பிற்பகல் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த ஊழியர்கள் அலறி கூச்சலிட்டனர். இது குறித்த தகவலின்பேரில் 21வாகனங்களில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடனடியாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரம் அலுவலகத்தில் சிக்கியிருந்த ஊழியர்களை தீயணைப்பு துறை வீரர்கள் ஏணி மூலமாக பாதுகாப்பாக மீட்டனர். இரண்டு பெண்கள் மற்றும் 5 ஆண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டெல்லியில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Income Tax ,ITO ,
× RELATED கண்ணாடி முகப்பில் பாஸ்டேக் ஸ்டிக்கர்...