×

சோழவந்தானில் உலக நன்மை வேண்டி யாக பூஜை

சோழவந்தான், மே 15: சோழவந்தான் கிருஷ்ணய்யர் பாடசாலையில் சுவாமி  சங்கரர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் வரதராஜ பண்டிட் தலைமையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து  சங்கரரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post சோழவந்தானில் உலக நன்மை வேண்டி யாக பூஜை appeared first on Dinakaran.

Tags : Cholavantan ,Cholavanthan ,Swami ,Shankar Jayanti ,Cholavanthan Krishnaiyar School ,Pandit Varadaraja ,Cholavandan ,
× RELATED மின்சாரம் தாக்கி பெண் படுகாயம்