×

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு..!!

டெல்லி: டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. டெல்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

4வது தளம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். சில பெண் ஊழியர்கள் மட்டும் வெளியேற முடியாததால், 4வது தளத்தில் உள்ள ஜன்னலை திறந்து அங்குள்ள சன்ஷேட் பகுதியில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்ற போதும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

The post டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Income Tax ,Delhi. ,Delhi ,Tax ,State Police Headquarters ,Income ,Dinakaran ,
× RELATED ரியல் எஸ்டேட் துறையில் நீண்டகால மூலதன...