நவ கோள்களின் நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரிய பகவான், தனது உச்ச வீடான மேஷராசியை விட்டு, சுக்கிரனின் வீடான ரிஷபராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே வைகாசி மாதம் எனவும் ஜேஷ்ட மாதம் எனவும் ஜோதிடக் கலை, போற்றிப் புகழ்கிறது. இதுவரை சூரியன் நிலைகொண்டிருந்த மேஷம், அவருக்கு உச்ச வீடாகும். ரிஷப ராசி அவருக்குப் பகை ராசியாகும்.வைகாசி மாதத்தின் தெய்வீகப் பெருமைகளைப் புராதன ஜோதிட நூல்கள் போற்றியுள்ளன. அவற்றை நாமும் அறிந்துகொண்டால், அளவற்ற நன்மைகளைப் பெறுவோமல்லவா? உத்தராயணக் காலத்தில், சூரியபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கும் இந்த வைகாசி மாதத்தை வஸந்தருது என ஆன்றோர்களும், சான்றோர்களும் காலங்காலமாகப் போற்றிவரும் இந்த வஸந்த காலத்தில்தான் வளங்கள் செழிக்கின்றன. மலர்கள் ஏராளமாக மலர்கின்றன. கனிகள் கனிகின்றன. வஸந்தருதுவின் பெருமைகளைப் பற்றி, கவி காளிதாஸன், தன் கவிதைகள் மூலம்
கொண்டாடி யிருக்கின்றார்
வைகாசி 6 (19-5-2024) : நவக்கிரகங்களில், வித்யாகாரகர் எனப் போற்றப்படும், புதனின் அவதார தினம் இன்று. கல்வி, மருத்துவம், விவேகம், ஆகியவற்றிற்கு அதிபதியான புதனை இன்று பூஜிப்பதால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். காசித் திருத்தலத்தின், கங்கைக் கரையில், சிவபெருமானைப் பூஜித்து, நவக்கிரகங்களில் ஒருவராகப் பேறு பெற்றவர் புதன்! ஜாதகத்தில் புதன் சுப பலம் பெற்றிருந்தால், பேசும் திறன், கல்வி உயர்வு, விவேகம், நிர்வாகத் திறமை, கணிதத்தில் ஈடுபாடு ஆகிய பேறுகள் கிட்டும்.இன்று, குறிப்பாக, மாணவ – மாணவியர் நவக்கிரக சந்நதிக்குச் சென்று, புதனுக்கு ெநய் தீபமேற்றி வைத்து தரிசித்துவிட்டு வந்தால், கல்வியில் உயர்ந்து விளங்குவர்.மேலும், இன்று கிடைத்தற்கரிய மோகினி ஏகாதசி. இன்று முழுவதும் உணவேதும் உண்ணாமல், நிர்ஜலமாய் இருந்து, மந் நாராயணனை துளசி இதழ்களால் அர்ச்சித்து வந்தால், அவர்கள் வீட்டில், சக்கரத்தாழ்வார் எழுந்தருளி சகல ேக்ஷமங்களையும் தந்தருளிக் காத்தருள்வார்.
வைகாசி 8 (21-5-2024) : பராசக்தியின் தசாவதாரங்களில் ஆறாவது அவதாரமாகியதும், அரசாங்க ஆதரவு, பதவி, புகழ், பேச்சில் கள்ளம் – கபடம் நிறைந்த “புத்தி சாதுர்யம் – திறமை” மிக்கவர்களாகவும், அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், ஒருவரின் ஜாதகத்தில், “ராஜதந்திரம்” போன்ற குணங்களுக்கு காரகத்துவம் வாய்ந்த ராகுபகவானின் ஆதிக்கம் மிகுந்தவர்களாகவும் சிறந்து விளங்கச் செய்ய உதவிடும் சின்ன மஸ்தா ஜெயந்தி வழிபாடு இன்று!தெய்வக்குழந்தை முருகப்பெருமான் அவதரித்த மாதமும் இந்த வைகாசிதான்!! திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் அம்மையப்பனின் நெற்றிக்கண்ணிலிருந்து தெறித்த ஓர் அக்னிப் பொறி, திருக்கயிலையின் மாந்தாதா சிகரத்திலுள்ள சரவணப் பொய்கையில் ஆறு துளிகளாக விழுந்தது. அடுத்த விநாடியே, அந்த ஆறு துளிகளும் ஆறு குழந்தைகளாக உருமாறின. இதனைக் கண்ட கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளை வாரியெடுத்து அணைத்து, சீராட்டி, தாலாட்டி, பாலூட்டி மகிழ்ந்தனர். ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும், அன்னையான, அம்பிகை பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஆசையுடன் வாரியெடுத்து, அணைத்தவுடன் ஒரே குழந்தையாக மாறி குமரப் பெருமானாகக் கிடைக்கும் பேறுபெற்றன அனைத்துலகங்களும்!! ஆறுமுகன், ஷண்முகன், முருகன், வடிவேலன், குமரன், கந்தன், குருபரன் என எண்ணற்ற திருநாமங்களினால், குழந்தை இன்றும் பூஜிக்கப்பட்டு வருகின்றான். இத்தகைய தெய்வீகப் பெருமை பெற்ற முருகப் பெருமானின் மீது இயற்றப்பட்ட “கந்தர் சஷ்டி கவசம்” எத்தகைய கிரக தோஷத்தையும் சூரியனைக் கண்ட பனியென உடனுக்குடன் போக்கும் சக்திவாய்ந்தது. அழகன், குமரனுக்கு, தமிழகத்தில், ஏராளமான, பிரசித்திப் பெற்ற திருக்கோயில்கள் உள்ளன. அசுரர் சூரபத்மனுடன் போர்புரிவதற்காக மிகப் பெரிய சேனையுடன் சென்ற முருகப் பெருமான், ஆறு இடங்களில் படைகளுடன் தங்கினான். அவ்விடங்களே இப்போது “அறுபடை வீடுகள்” எனப் பிரசித்திப் பெற்றுள்ளன.
பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி, திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களே அறுபடை வீடுகளெனப் பூஜிக்கப்படுகின்றன.இத்தகைய பெருமை பெற்ற புண்ணிய தினமே வைகாசி 9-ம் தேதி (மே 22-5-2024) ஆகும். மகத்தான புண்ணிய தினத்தில், பக்தியுடன் முருகப் பெருமானைப் பூஜித்தால், அனைத்துத் துன்பங்களும் பறந்தோடும்! குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். மேலும், இன்றைய விசேஷம் நம்மாழ்வார் திருநட்சத்திரம்!
நரசிம்ம ஜெயந்தி!
இன்று காலை 8.20 மணி வரை ஸ்வாதி நட்சத்திரம் இருப்பதால், நரசிம்ம ஜெயந்தியும் இன்றே கொண்டாடப்படுகிறது. பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக பகவான்,மந் நாராயணன் நரசிம்மராக அவதரித்த புண்ணிய தினமும் இன்று! இன்று மாலை கோலமிட்டு, நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்த பானகம், பாசிப்பருப்பு தேங்காய்-உப்பு கலந்த கோசுமல்லி, தயிர் சாதம் அமுது (நைவேத்த்ியம்) செய்வித்து, பூஜித்தால், அனைத்து துன்பங்களும், தீயினிற் தூசாவது திண்ணம். குடும்பத்தில், சுபிட்சம் பெருகும். உங்களுக்கு எதிராக யாரேனும் செய்வினை, பில்லிசூனியம் செய்விக்க யத்தனித்தால், அவைகளினால் உங்களுக்கு யாதொரு துன்பமும் நேரா வண்ணம் காத்து ரட்சிப்பார், லட்சுமி நரசிம்மர்! மேலும், “உக்ரம், வீரம், மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும், ம்ருத்யும் நமாம்யஹம்” எனும் மகா மந்திரத்தை பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில் 9 முறை அல்லது 27 முறை முடிந்தால் 108 முறை சொன்னால், எதிரிகள் பயமற்று, எங்கும், எதிலும் வெற்றிமேல் வெற்றி உங்களை வந்தடையும்.
வைகாசி 11 (24-5-2024) : காஞ்சி மகா பெரியவாள் அவதார தினம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமெனப் பூஜிக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவாள் எனும் தெய்வீக ரத்தினம் நமக்குக் கிடைத்த மகத்தான புண்ணிய தினம். காஞ்சி திருத்தலம் சென்று, அவரது பிருந்தாவனத்தைத் தரிசிப்பது, பரம புண்ணியத்தைத் தரும்.மேலும், இன்று கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் ஓங்கிடவும், பிணக்கு – மனக்கசப்பு காரணமாக ெநடுங்காலமாகப் பிரிந்திருந்த தம்பதியினரை ஒன்றுசேர்க்கச் செய்யும் அர்த்தநாரீஸ்வரர் விரதம். வீட்டில் பதினாறு வகைச் செல்வங்களும் குறைவின்றி பெற்று, மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வாழ்ந்திட சம்பத் கௌரி விரதம் அனுஷ்டிக்க உகந்த தினமும் இன்றுதான். மேலும், இன்று பௌர்ணமி தினமும்கூட! ஜாதகத்தில் மனோகாரகரான சந்திர பகவான்,பௌர்ணமிக் காலங்களில் மனித மனங்களை அதிக அளவில் அலைபாயச் செய்திடுவார்; விவேகமின்மையாலும், தன் மனம் போனபோக்கில் செயல்படும் தன்மை அதிகரிக்கும். மனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செய்யப்படும் விரதமே பௌர்ணமி விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, பகவான்,நாராயணனே, சகல சம்பத்துக்களையும் தந்து, காத்தருள்வதாக, சத்தியப்ரமாணமே செய்து கொடுத்திருப்பதாலே இவ்விரதம் சத்தியநாராயண பூஜையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.வைகாசி 13 (26-5-2024) : திருஞான சம்பந்தர் பெருமானின் குருபூஜை.
புத்த பூர்ணிமா- 23-5-2024
அனைத்து ஜீவன்களிடத்தும், அன்பு காட்ட வேண்டும். அசைவம் கண்டிப்பாகக் கூடாது. மிருக வதை கொடிய பாபம். மனித வாழ்க்கையில் தூய்மை, ஒழுக்கம், பிற ஜீவராசிகளின்மீது அன்பு, ஆசையே துன்பத்திற்குக் காரணம் ஆகியவற்றைப் போதித்த, கௌதம புத்தர் அவதரித்த புனித தினமும் இன்று தான்!ராஜ வம்சத்தில் பிறந்த சித்தார்த்தரின் தாய், ராணி மாயாதேவி, தீவிர சிவ பக்தை! திருக்கயிலாயத்தை அடுத்த புண்ணிய ஏரியான மானஸ ஸரஸின் அருகிலுள்ள, ஜுகு என்ற இடத்தில் சிவபெருமானைக் குறித்து கடும் தவமியற்றி, அதன் பயனாக அவதரித்தவரே, கௌதம புத்தர்! நோய்கள், வறுமை, துன்பங்கள் அனைத்திற்கும் மக்கள் செய்யும் பாபங்களே காரணமாகும் என்பதை மக்களிடையே உபதேசம் செய்து, மக்களை நல்வழி செலுத்துவதற்காக, தனது அரச வாழ்க்கையைத் துறந்த அவதாரப் புருஷரான கௌதம புத்தர் அவதரித்த தினமாகிய இன்று, அவரது உபதேசங்களை உணர்ந்து, முக்கியமாக, “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்பதை உணர்ந்து, நேர்மையான வழியை நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், கடைப்பிடிக்க வேண்டிய மனவுறுதியை எடுத்துக்கொள்ளவேண்டிய மகத்தான புண்ணிய தினமான இன்று முதல், அசைவ உணவைத் தவிர்த்தல், பிற உயர்களிடத்தில் ஜீவகாருண்யத்துடன் வாழ்வது, அனைத்துத் துன்பங்களையும் அகற்றும்.
கங்கோற்பத்தி!
ஸகர மன்னன் செய்த மிகப் பெரிய அஸ்வமேத யாகத்தில் தடைகள் ஏற்பட்டு, அவருடைய புத்திரர்கள் அனைவரும், கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலானபோது, அவர்கள் நற்கதியடைவதற்காக, மன்னன் பாகீரதன் கடுந்தவமியற்றி, அதன் பயனாக, தேவகங்கை பூவுலகிற்குக் கங்காநதியாக எழுந்தருளியதும் இம்மாதத்தில்தான்! இதையே வட இந்தியாவில் வைகாசி 25-ம் (7-6-2024) தேதியிலிருந்து “கங்கா தசரா” என்று 10 நாட்கள் கங்கையில் புனித நீராடிக் கொண்டாடுகிறார்கள். அனைத்துப் பாபங்களையும் போக்கவல்லது இது!!
வைகாசி 17 (30-5-2024) : காலபைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த சதாசிவாஷ்டமி. இந்நன்னாளில் சிவபெருமானுக்கு, அபிஷேகத்திற்கு, பால், கரும்புச்சாறு, தேன், இளநீர் போன்ற பொருட்களைக் கொடுத்து, தரிசித்துவிட்டு வந்தால், சிவபெருமானின் பரம கருணைக்குப் பாத்திரராவீர்கள். உங்கள் மனக் குழப்பம் நீங்கும். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் ஓங்கும். வைகாசி 25 (7-6-2024): வீட்டில் யாரேனும், நெடுநாட்களாக நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால், அந்நோயிலிருந்து விடுபட்டு, நல்ல தேக -ஆரோக்கியம் பெற்றிட உதவும் புன்னாக கௌரி விரதம், இன்று.
வைகாசி 27 (9-6-2024) ஞாயிற்றுக்கிழமை: ரம்பா திருதீயை. இன்று அம்பிகை கௌரியை பக்தியுடன் பூஜைசெய்தால், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள திருமணத் தடைகள் விலகி, விவாகம் நடைபெறும்.வைகாசி 32 (14-6-2024) வெள்ளிக்கிழமை: தூமாவதி ஜெயந்தி பராசக்தியின் தசாவதாரங்களில் ஏழாவது அவதாரமாகிய இவ்வடிவம், வேதவேதாந்த ஞானத்திற்கும், தீர்க்கமுடியாத பிரச்னைகளையும் எவ்வித சிரமமுமின்றி தீர்க்கச்ெசய்ய உதவும் நுட்பமான அறிவிற்கு ஆதிபத்தியம் கொண்டவரும், மோட்சத்திற்குக் காரகத்துவம் வாய்ந்தவருமான கேது பகவானின் தோஷங்களைப் போக்குபவதாகவும் அமைந்துள்ளது இவ்விரதம்.
The post வினையகற்றி வெற்றி தரும் வைகாசி! appeared first on Dinakaran.