×

மாமுல் தர மறுத்த வியாபாரிகளுக்கு வெட்டு

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் மாமுல் தர மறுத்த வியாபாரிகளுக்கு வெட்டு ஏற்பட்டுள்ளது. ராமனுஜம் தெருவில் காலணி கடை வைத்திருக்கும் உசேன் என்பவரது கடைக்குள் 6 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. உசேன் கடைக்குள் நுழைந்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்டுள்ளது. மாமுல் தர மறுத்ததால் 6 பேர் கொண்ட கும்பல் உசேனையும், அவரது கடையில் வேலை பார்த்த யாசினையும் வெட்டிவிட்டு தப்பியது. உசேன் கடைக்கு அருகாமையில் இருந்த துரித உணவக உரிமையாளர் பாசிர்ஹமத்தையும் மர்மகும்பல் வெட்டியது. வியாபாரிகள் அளித்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாமுல் தர மறுத்த வியாபாரிகளுக்கு வெட்டு appeared first on Dinakaran.

Tags : Mamul ,Chennai ,Vannarappetta ,Hussain ,Ramanujam Street ,Dinakaran ,
× RELATED சென்னையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது