×

பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி போஸ்ட்மேன் பலி வேலைக்கு சென்றபோது பரிதாபம் பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, மே 14: பேரணாம்பட்டு அருகே பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி போஸ்ட்மேன் பலியானார். வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் சிலம்பரசன் வேலைக்கு செல்வதற்காக மேல்பட்டியில் இருந்து பைக்கில் புறப்பட்டு விண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ரெட்டிமாங்குப்பம் அருகே சென்றபோது அதேபகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் ஓட்டிவந்த டிராக்டர், பைக் மீது நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் பலத்த காயமடைந்தார். இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து இரு வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய டிராக்டர் டிரைவர் விஜயனை தேடி வருகிறார்.

The post பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி போஸ்ட்மேன் பலி வேலைக்கு சென்றபோது பரிதாபம் பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Silambarasan ,Vinnamangalam village ,Vaniyampadi ,Melpatti village ,Peranampattu ,Dinakaran ,
× RELATED ஆட்டோவுடன் கடத்தப்பட்ட கணவரை...