×

அரசு விரைவு பஸ் பிரேக் பிடிக்காமல் மொபட் மீது மோதி விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும்

வேலூர், ஜூலை 26: வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற அரசு விரைவு பஸ் பிரேக் பிடிக்காமல் மொபட் மீது மோதியதால் வியாபாரி காயம் அடைந்தார். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் மாலை 3 மணியளவில் கன்னியாகுமரி வரை அரசு விரைவு சொகுசு பஸ் செல்கிறது. நேற்றும் வழக்கம்போல் மாலை பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் வேலூர் அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சிக்னல் விழுந்து உள்ளது. அப்போது டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றபோது திடீரென பிரேக் பிடிக்காததால் வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அதை சுதாரித்துக் கொண்ட டிரைவர் இடது புறம் உள்ள பில்டர்பெட் சாலைக்கு திருப்பி உள்ளார். அப்போது, அங்கிருந்த மொபட் மீது பஸ் மோதிவிட்டு நின்றது.

இதில் மொபட்டில் இருந்தவர் லேசான காயத்துடன் தப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காயம் அடைந்தவர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த காலேஷா (36) என்பதும் இவர் மொபட்டில் பாத்திரம் வியாபாரம் செய்து வருவதும், ஓய்வுக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்த போது, மொபட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அலுமினிய சாமான்கள் நசுங்கி சேதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேக் பிடிக்கவில்லை என்றதும் பஸ்சை திடீரென திருப்பிய டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த விரைவு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் கன்னியாகுமரிக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

The post அரசு விரைவு பஸ் பிரேக் பிடிக்காமல் மொபட் மீது மோதி விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு வேலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்