×

₹5.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஓமலூர், மே 14:ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், 52 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 6,206 கிலோ கொப்பரையை 22 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 4 வியாபாரிகள் மொத்த கொப்பரையும் ₹5 லட்சத்து 37 ஆயிரத்து 171க்கு வாங்கினர். ஓமலூரில் கடந்த 2 வாரமாக கொப்பரை விலை குறைந்து விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில், கிலோவிற்கு 2 ரூபாய் விலை உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ₹90.99 காசுக்கு விற்பனையான கொப்பரை, நேற்று ₹92.99 காசுக்கும், குறைந்தபட்ச விலையிலும் ₹7 வரை விலை உயர்ந்து ₹67.27க்கும், சராசரி விலையாக ₹89.09க்கும் விற்பனையானது. கொப்பரை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post ₹5.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Omalur ,Omalur Regulation Hall ,Dinakaran ,
× RELATED ஓமலூர் உட்கோட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது