×

கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி

வத்தலக்குண்டு மே 14: வத்தலக்குண்டுவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நற்பணி நலச்சங்கம், சுப்பிரமணிய சிவா ஆர்வலர்கள் சார்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் டாக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் ஜெர்மன் ராஜா, பொருளாளர் பாக்கியராஜ், துணை தலைவர் மருது ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இதில் உலக தமிழ் சிற்றிதழ் சங்க தலைவர் வதிலை பிரபா, தமுஎகச மாவட்ட செயலாளர் கவிவாணன், ஆர்வலர்கள் சாந்தகுமார், அலெக்சாண்டர், சோனே முத்து, வசந்தமுகில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரும் தமிழக முதல்வருக்கு வத்தலக்குண்டுவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் கட்ட கோரி தபால் நிலைய பெட்டியில் கடிதமிட்டனர்.

The post கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Chief Minister ,Subramania ,Shiva ,Nalapani Nalashangam ,Subramania Shiva ,President ,Dr. ,Annadurai ,German Raja ,Treasurer ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு...