×

10,12ம் வகுப்பில் ஏ.வி.பி. ட்ரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 7.82 லட்சம் பேர் பயன்

திருப்பூர், மே 14: திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 7.82 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இந்த திட்டத்தினால் 1.70 கோடி பேர் பயனடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 7,82,399 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இது குறித்து தெக்கலூரை சேர்ந்த மாரியம்மா கூறியதாவது: எனக்கு 76 வயதாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய் உள்ளது. இதற்காக தெக்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வரிசையில் காத்திருந்து, சிகிச்சைக்கான மாத மாத்திரைகள் வாங்கி வந்தேன்.

இதனால் எனக்கு வயதான நிலையில் மிகவும் சிரமமாக உள்ளது.தற்போது எனக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடு தேடி எனது நோய்க்கான பரிசோதனையும் செய்து 2 மாதத்திற்கான மாத்திரைகளும் வழங்குகின்றனர். இதனால் நான் தற்போது மருத்துவமனைக்கு செல்லாமல் எனது வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறேன். இந்த சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

The post 10,12ம் வகுப்பில் ஏ.வி.பி. ட்ரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 7.82 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Trust National Matriculation School ,Tirupur district ,Tirupur ,India ,
× RELATED காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!!