- நோயல் கதவு
- வலம் பழம்
- திருப்பூர்
- திருப்பூர் கார்ப்பரேஷன்
- நொயல் நதி
- வலம் பாலம்
- தென்மேற்கு
- கேரளா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திருப்பூர், மே 28: திருப்பூர் மாநகராட்சி சார்பில் வளம் பாலம் அருகே நொய்யல் ஆற்றை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் இன்னும் ஒரு மாதங்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரின் முக்கிய நீர்நிலையாக கருதப்பபடும் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி மாநகராட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள முட்செடிகள் மற்றும் புதர் அகற்றப்பட்டது. மேலும் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த ஆகாயத்தாமரைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, தூர் வாரப்பட்டுள்ளது. பருவமழை எப்போது பெய்தாலும் மழைநீர் எளிதாக பாயும் வகையில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
The post மாநகராட்சி சார்பில் வளம் பாலம் அருகே நொய்யல் தூர் வாரும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.