×

காரில் புகையிலை பொருட்கள் கடத்தல் சம்பவம் கர்நாடகா, டெல்லி செல்ல போலீசார் திட்டம்

 

திருப்பூர், மே 27: திருப்பூர் விபத்தில் சிக்கிய கார்களில் இருந்து 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா மற்றும் டெல்லி செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையத்தில் நேற்று முன்தினம் கர்நாடகா பதிவு கொண்ட ஒரு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த காருக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த அரசு பஸ் அந்த காரின் மீது மோதியது.

மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்த கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட காரும் பஸ் மீது மோதியது. இதற்கிடையே கார்களை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கார்களில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர். பெருமாநல்லூர் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது 2 காருக்குள்ளும் 158 மூட்டைகளில் 1,024 புகையிலை பொருட்கள் இருந்தது.

மேலும் புகையிலை பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கு இடையே அந்த கார் எண்களை ஆய்வு செய்த நிலையில், அது பதிவு செய்யப்பட்டுள்ள டெல்லி மற்றும் கர்நாடகா முகவரிக்கு போலீசார் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

The post காரில் புகையிலை பொருட்கள் கடத்தல் சம்பவம் கர்நாடகா, டெல்லி செல்ல போலீசார் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka, Delhi ,Tirupur ,Tirupur accident ,Karnataka ,Delhi ,Valashappalayam ,Perumanallur ,Avinasi taluk ,Dinakaran ,
× RELATED காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்...