×

பிளஸ் 1 ரிசல்ட் இன்று வெளியீடு

சென்னை: பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை வழக்கம் போல் 9.30 மணிக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிடுகிறார். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் இருந்து தங்கள் பள்ளிகளில் படித்த பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும், அந்தந்த மாவட்டத்துக்கான அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

The post பிளஸ் 1 ரிசல்ட் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Director of ,Government ,Examinations ,Sethuramavarma ,Dinakaran ,
× RELATED இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள்...