×

ஆறுதல் வெற்றியா? அடுத்த சுற்று வாய்ப்பா? ஆசையில் டெல்லி லக்னோ மோதல்

டெல்லி: ஐபிஎல் டி20 போட்டியின்64வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ்-லக்னோ எஸ்ஜி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரவுள்ளன. இந்நிலையில் கொல்த்தா மட்டுமே முதல் அணியாக பிளே ஆப் சுற்றை உறுதி செய்துள்ளது. எஞ்சிய 4 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான், சென்னை, ஐதராபாத் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. இந்த அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து பெங்களூர், டெல்லி, லக்னோ அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

இதில் 2 அணிகள்தான் டெல்லியில் இன்று இரவு மோத உள்ளன. ரிஷப் பன்ட் ‘ஒரு ஆட்டத் தண்டனை’ முடிந்து விட்டதால், அவர் தலைமையில் தான் டெல்லி களம் காணும். அந்த அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புளளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள ஒரே ஆட்டமான இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் போதாது. அதிக வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினால் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கலாம். அதுவும் மற்ற அணிகளின் வெற்றித் தோல்விகள் அதையும் முடிவுச் செய்யும்.

ஆனால் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டி உள்ளது. ஏற்கனவே விளையாடிய 12 ஆட்டங்களில் தலா 6வெற்றி தோல்விகளை சந்தித்து 12 புள்ளிகளுடன் 7 இடத்தில்இருக்கிறது. இன்று டெல்லியையும், மே 17ம் தேதி மும்பையையும் வீழ்த்தினால் பிளே ஆப் வாய்ப்பில் பல அணிகளை லக்னோ முந்தும். அதற்கும், வசைகளை தவிர்க்கவும் லக்னோவுக்கு வெற்றிகள் அவசியம். அந்த முனைப்பில் லக்னாவும், டெல்லியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதனால் இன்றைய ஆட்டத்தில் மட்டுமல்ல இனி வரும் ஆட்டங்களிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்
* இந்த அணிகள் இதுவரை மோதிய 4 ஆட்டங்களில் லக்னோ 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
* இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களில் அதிகபட்சமாக லக்னோ 195, டெல்லி 189ரன் விளாசியுள்ளன. குறைந்தபட்சமாக லக்ேனா 167, டெல்லி 143ரன் எடுத்துள்ளன.
* நடப்புத் தொடரில் ஏப்.12ம் தேதி நடந்த 26வது லீக் ஆட்டத்தில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று லக்னோவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது.

The post ஆறுதல் வெற்றியா? அடுத்த சுற்று வாய்ப்பா? ஆசையில் டெல்லி லக்னோ மோதல் appeared first on Dinakaran.

Tags : Delhi Lucknow ,Delhi ,IPL T20 ,Delhi Capitals ,Lucknow SG ,IPL ,Koltha ,Aasi ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி...