×

ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்க லக்னோ முனைப்பு

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் 64வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ்-லக்னோ அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று போட்டிகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் கொல்கத்தா மட்டுமே முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எஞ்சிய 3 இடங்களுக்கான ேபாட்டியில் ராஜஸ்தான், சென்னை, ஐதராபாத் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. இந்த அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து ஆர்சிபி, டெல்லி, லக்னோ அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன.

இந்நிலையில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள ஒரே போட்டியான இன்றைய போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கலாம். அதுவும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்துதான்அமையும்.

அதே நேரத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ இன்னும் 2 போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது. ஏற்கனவே ஆடிய 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்து 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. இன்று டெல்லியையும், வரும் 17ம் தேதி மும்பையையும் வீழ்த்தினால் பிளே ஆப் வாய்ப்பு லக்னோ அணிக்கு பிரகாசமாகும். எனவே அதற்கான முழு முயற்சியில் லக்னோ அணி இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லியும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல்பறக்கும்.

The post ஐபிஎல் டி20 தொடர்; டெல்லியை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்க லக்னோ முனைப்பு appeared first on Dinakaran.

Tags : IPL T20 ,Lucknow ,Delhi ,New Delhi ,Delhi Capitals ,Kolkata ,Dinakaran ,
× RELATED உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம்...