புதுடெல்லி: மக்களவை நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில்,‘‘பேசியுள்ள அவர், சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியா உருவாக்கம் வரை பெண்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றனர். இருப்பினும் தற்போது இருக்கும் கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக அவர்களின் கடின உழைப்புக்கும், தவத்துக்கும் நீதி கிடைக்க காங்கிரஸ் ஒரு புரட்சிகர நடவடிக்கையை இத்தகைய சூழலில் எடுத்துள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சியின் ‘‘மகாலட்சுமி’’ திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். காங்கிரசின் இந்த உத்தரவாதங்கள் ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை அல்லது உணவுப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு காங்கிரஸ் கட்சி பலத்தை அளித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கரம் மக்களுடன் என்றும் உள்ளது என உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post காங்கிரசின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்: சோனியா உறுதி appeared first on Dinakaran.