×

மோடி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராமரின் விருப்பம்: ஆதித்ய நாத் சொல்கிறார்

பாரபங்கி: உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கி தொகுதி பாஜ வேட்பாளரை ஆதரித்து ஹைதர்கர்ரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர்,‘‘மோடி அலையானது சுனாமியாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சாதி, சமூகம் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் வளர்ச்சி திட்டங்களால் பயனடைந்துள்ளனர். எங்களது அன்புக்குரிய கடவுள் ராமரும் தனது தீவிர பக்தர் மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார். மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்துக்கு நாம் அனைவருமே சாட்சி தான். கடந்த 4 ஆண்டுகளாக 80கோடி மக்கள் இலவச ரேசன் பெற்றுள்ளனர். 12கோடி விவசாயிகள் கிசான் சம்மன் நிதியின் மூலமாக பயனடைந்துள்ளனர்” என்றார்.

The post மோடி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராமரின் விருப்பம்: ஆதித்ய நாத் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Ram ,Aditya Nath ,Barabanki ,Uttar Pradesh ,Chief Minister ,Yogi Adityanath ,Haidergarh ,BJP ,Modi wave ,Rama ,
× RELATED அதீத நம்பிக்கையே உபியில் பாஜவின்...