×

தண்டவாளத்தில் தூங்கியபோது டெமு ரயில் ஏறி வாலிபர் பலி: 2 நண்பர்கள் கை, கால்கள் துண்டானது

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு கடந்த ஓராண்டாக டெமு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில், கடந்த சில வாரங்களாக திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகாலை 4.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்பட்டு 5.50 மணிக்கு அகஸ்தியம்பள்ளி வந்தடையும். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்பட்ட டெமு ரயில் அதிகாலை 4.55 மணிக்கு வேதாரண்யம் அருகே மணக்காடு என்ற இடத்தில் வந்தபோது தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேர் மீது ரயில் ஏறியது. இதில் ஒருவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 2 பேர் கை, கால்கள் துண்டாகி படுகாயமடைந்தனர். திருவாரூர் ரயில்வே போலீசார், காயமடைந்த 2 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர் வேதாரண்யம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த காளிதாசன் மகன் குமாரசாரதி(18) என்பதும், காயமடைந்தவர்கள் அவரது நண்பர்கள் பிரபாகரன்(18), தூளசிநாரயணன்(18) என்பதும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த 3 பேரும் மணக்காடு மகாமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் சாமி தரிசனம் செய்த 3 பேரும் போதையில் தண்டவாளத்தில் தூங்கியபோது விபத்து சிக்கியது தெரிய வந்தது.

The post தண்டவாளத்தில் தூங்கியபோது டெமு ரயில் ஏறி வாலிபர் பலி: 2 நண்பர்கள் கை, கால்கள் துண்டானது appeared first on Dinakaran.

Tags : Temu ,Vedaranyam ,Agasthiyampalli ,Nagapattinam ,Tirutharapoondi ,Tiruthurapundi ,Tiruvarur ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு