திருச்சி: சார்ஜாவில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையை ஆய்வு செய்ததில் ஒரு மர்ம பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதித்தபோது அதில் டைல்ஸ் கட்டிங் மெஷின் இருப்பது தெரிந்தது. மேலும், அந்த டைல்ஸ் கட்டிங் செய்யும் பிளேடை இயக்கும் சிறிய மோட்டாருக்குள் உருளை வடிவிலான தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மோட்டரை உடைத்து சோதனை செய்ததில், அதற்குள் 1 கிலோ 299 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.92 லட்சம். இதையடுத்து அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
The post திருச்சி விமானத்தில் டைல்ஸ் கட்டிங் மெஷினில் கடத்திய 1 கிலோ தங்கம் சிக்கியது appeared first on Dinakaran.