×

ஒடுகத்தூர் பாக்கம் கிராம கைலாயநாதர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திரகாவேரி ஆற்றங்கரையோரம் சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோயில் உள்ளது. காசிக்கு நிகரான இக்கோயிலில் விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது. மேலும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இங்கு தரிசனம் செய்வார்கள். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி அல்லது வைகாசி மாத ெதாடக்கத்தில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

அதன்படி கோயிலில் இந்த ஆண்டு சித்திரை மாத கடைசி நாளான இன்று சூரியஒளி சிவபெருமான் மீது விழும் அபூர்வ நிகழ்வு தொடங்கியது. அப்போது மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய 3 மாதங்கள் வரை தொடர்ந்து நடைபெறும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

The post ஒடுகத்தூர் பாக்கம் கிராம கைலாயநாதர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Odukatur Pakkam ,Kailayanathar temple ,Odukatur ,Vellore District ,Pakkam ,Umamakeshwari Utanura ,Kailayanathar ,Temple ,Uthrakaveri River ,Swami ,Ikoil ,Kashi ,
× RELATED நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச...