×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுமா என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது. திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்து உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BMC ,Vikravandi ,Ramadoss ,BAMAK ,Ramadas ,BAMA ,Thylapuram ,Tindivanam ,Villupuram district ,Tamil Nadu government ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை...