×

விழுப்புரம் அருகே தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை சாலையில் கிடத்தி உறவினர்கள் மறியல்

விழுப்புரம்: மரக்காணம் அருகே தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை சாலையில் கிடத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்ரவர்த்தி – வனிதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் தர்மத்தின் மகள் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் செய்துகொள்ள சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வனிதா அருகிலுள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக மரக்காணம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனா வேதனையில் இருந்த வனிதா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து வனிதாவின் உடல் அருகில் உலா அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் கந்தாடு தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணின் உடலை கிடத்தி, மரக்காணம் போலீசாரின் அஜாக்கிரதையால் தான் தனது தாய் இறந்துவிட்டதாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை எடுத்துச்செல்ல கோரியதை தொடர்ந்து அங்கிருந்து உடல் அப்புறப்படுத்தப்பட்டது.

The post விழுப்புரம் அருகே தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை சாலையில் கிடத்தி உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Marakkanam ,Chakraborty ,Vanitha ,Marakanam ,Villupuram district ,
× RELATED விழுப்புரம் ரயில் நிலையத்தில்...