- ஜெகன்
- சந்திரபாபு
- பவன்
- கல்யாண்
- ஆந்திரப் பிரதேசம்
- திருமலா
- முதல் அமைச்சர்
- YSR காங்கிரஸ் கட்சி
- வைஸ் ஜகன்மோகன்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள தேர்தலை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என் பல ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடந்து வருகிறது. இதில், முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் மற்றும் பல பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி யாருக்கு என மெஜாரிட்டியை வைத்து சூதாட்டம் தீவிரமாக நடந்து வருகிறதாம். மேலும் சந்திரபாபு மகன் லோகேஷ் போட்டியிடும் மங்களகிரியில் வெற்றி யாருக்கு? என பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் சில பகுதிகளில் எத்தனை வாக்குகள் பதிவாகும் என பந்தயம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் 20 நாட்கள் இடைவெளி உள்ளது. இதனால் பந்தயம் கட்டுபவர்கள் இடைத்தரகர்களை நாடி வருகின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு ₹100 பத்திரங்களில் கையெழுத்திட்டு பணம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஆன்லைனிலும் பணப் பரிவர்த்தனை நடந்து வருகிறது. சில இடங்களில் ரொக்கமாக பணம் கைமாறுகிறது. கணக்கெடுப்பின் அடிப்படையில் விகிதங்களும் மாறி வருகின்றன. தற்போதைய மாற்றங்களைப் பொறுத்து பந்தய முறை மாறு வருகிறது.
The post ஜெகன், சந்திரபாபு, பவன் கல்யாண் தொகுதிகளில் பல கோடிக்கு பந்தயம்: ஆந்திராவில் அரசியல் சூதாட்டம் appeared first on Dinakaran.