அமேதி: அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் கெலாட் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் பாஜக எம்பி ஸ்மிருதி இரானி, மீண்டும் அதே தொகுதியில் போட்டிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ராகுல்காந்தி தோற்றார்.
அதனால் இந்த தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான கடந்த 3ம் தேதி கே.எல்.சர்மா என்பவர் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மேலும் ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பேட்டியில், ‘ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடவில்லை.
இந்த தொகுதியில் கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். அவர் கடந்த 40 ஆண்டுகளாக அமேதி மக்களுக்கு அறிமுகமானவர். ஸ்மிருதி இரானியை தோற்கடிக்கும் வல்லமை பெற்றவர். ரேபரேலியில் ராகுல் காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார். அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்’ என்றார்.
The post அமேதி, ரேபரேலியில் காங். அமோக வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் நம்பிக்கை appeared first on Dinakaran.