×

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி (தொகுதி-IV) தேர்வுக்கான மாதிரி தேர்வு

திருச்சி, மே 12: திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வில் கலந்து கொண்டு மாணவர்கள் பயனடைய, மையநுாலக முதல்நிலை அலுவலர் தனலெட்சுமி அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV (TNPSC Group IV) போட்டித்தேர்வுக்கான மாதிரித்தேர்வை நாளை (மே.13) மாவட்ட மையநுாலகத்தில் நடத்துகிறது. தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை நடைபெறும். மாதிரி தேர்வில் முழு பாட பகுதிகளில் இருந்தும் வினாக்கள் (Full Portion) இடம் பெறும். மாதிரி தேர்வை தொடர்ந்து திருப்புதல் (Revision) வகுப்பு நடைபெறும். இந்த வகுப்பை என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் விஜயாலன் நடத்துவார்.

வகுப்பில் கலந்து கொள்பவர்கள் குறிப்பெடுக்க வசதியாக அவசியம் நோட்டு புத்தகம் கொண்டு வரவேண்டும். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்.-விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும், மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட மையலுாலக முதல்நிலை நுாலகர் தனலெட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

The post திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி (தொகுதி-IV) தேர்வுக்கான மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Trichy District Central ,Library ,Trichy ,Central Primary Officer ,Thanaletsumi ,Trichy District Central Library ,N.R. IAS Academy ,Rotary… ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு