×

ஆசிய இளையோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவன் கலெக்டரிடம் வாழ்த்து

காஞ்சிபுரம், மே 12: துபாயில், 21வது ஆசிய இளையோர் தடகள விளையாட்டு போட்டிகள், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 27ம்தேதி வரை நடந்தது. இவ்விளையாட்டு போட்டியில் சங்கரா கலைக் கல்லூரியில் பிகாம் 2ம் வருடம் படிக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் என்ற மாணவன் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று 3ம் இடத்தினை பிடித்து வெண்கலம் பதக்கம் பெற்றார். இவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தடகள பயிற்சியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஆசிய இளையோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவன் கலெக்டரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Asian Youth Athletics Championships ,Kanchipuram ,21st Asian Youth Athletics Games ,Dubai ,B.G.M ,Sankara Arts College ,Asian Youth Athletics Competition ,Dinakaran ,
× RELATED ரேஷன் கார்டு குறைதீர் முகாம்