×

கிறிஸ்டோபர் கல்லூரி சார்பில் களக்காட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு

களக்காடு,மே 12: களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நாங்குநேரி அருகே சூரங்குடி கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. களக்காடு நகராட்சி தலைவி சாந்தி சுபாஷ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் கல்லூரி நிர்வாகத்தலைவர் பிரவீன் கிறிஸ்டோபர், செயலாளர் ஏஞ்சல் பிரவீன், நிர்வாக உறுப்பினர்கள் நிக்சன் தேவராஜ், சுகுமார், முதல்வர் ஜெபமலர் வின்செஸ் மணிமாலா, துணை முதல்வர் கிளாரினா, நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் செல்வி, துணை திட்ட உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிறிஸ்டோபர் கல்லூரி சார்பில் களக்காட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ne Mor Pandal ,Kalakkad ,Christopher College ,Kalakadu ,Neer Mor Pandal ,National ,Program ,Surangudi Christopher College of Arts and Science ,Nanguneri ,New Bus Station ,Municipal Chairperson ,Shanti Subhash Neer Mor ,
× RELATED களக்காட்டில் கோமாரி நோய் தடுப்பு...