×

20 பயனாளிகளுக்கு ₹96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சேந்தமங்கலம், ஜூலை 26: புதுச்சத்திரம் ஒன்றியத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 20 பயனாளிகளுக்கு ₹94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ராமலிங்கம் எம்எல்ஏ வழங்கினார்.
புதுச்சத்திரம் ஒன்றியம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, தாளம்பாடி, பாபிநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக கணினியில் பதிவு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார அட்மா குழு துணை தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு, 20 பயனாளிகளுக்கு ₹94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணைத்தலைவர் ராம்குமார், பிடிஓ.,க்கள் சுதா, முத்துலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரேமா, கோபிநாத், யுவராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார், சதீஷ்குமார், தியாகராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 20 பயனாளிகளுக்கு ₹96 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Ramalingam MLA ,Chief Minister ,Project Camp ,Puduchattaram Union ,Minister Project ,Camp ,Papinayakanpatti Panchayat, Puduchattaram Union ,Dinakaran ,
× RELATED குளத்தில் அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 2 பேர் கைது