தோகைமலை, மே 12: கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் ஆண் புள்ளி மான் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி பெரிய ஏரியில் ஆண் புள்ளி மான் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து ஒப்படைத்தனர். தோகைமலை அருகே உள்ள வடசேரி பெரிய ஏரியில் 100 க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளது. இந்த புள்ளி மான்கள் மேய்ச்சலுக்காக இரவு நேரங்களில் வடசேரி பெரிய ஏரியில் இருந்து வெளியில் வருவதும், பின்னர் பெரிய ஏரிக்குள் செல்லுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வடசேரி பெரிய ஏரியில் இருந்து சுமார் 5 வயது உடைய பெண் புள்ளிமான் ஒன்று மேய்ச்சலுக்காக வெளியில் வந்து உள்ளது. அப்போது வடசேரி காளியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி இறந்தது.
இதேபோல் நேற்று முன்தினம் நெய்தலூர் பகுதியில் மேய்ச்சலுக்காக ஆண் புள்ளி மான் ஒன்று சென்றபோது நாய்கள் கடித்து உள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் புள்ளிமானை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று காலை வடசேரி பெரிய ஏரியில் சுமார் 5 வயது உடைய ஆண் புள்ளி மான் மரத்தின் அருகே இறந்து கிடந்து உள்ளது. தகவலறிந்த வடசேரி விஏஓ கணேசன் வனத்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளிமானை உடல் கூறு ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து வனத்துறை மற்றும் வடசேரி விஏஓ விசாரனை நடத்தி வருகிறார்.
The post கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான் appeared first on Dinakaran.