×

வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வேளாண்மை விரிவாக்க பணியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குனர் (விரிவாக்கம்) பதவிகள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 159 பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழித்தேர்வை கடந்த 20.5.2023 மற்றும் 21.5.2023 அன்று நடத்தியது. தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு வேளாண்மை உதவி இயக்குனர் பதவிக்கு 45 பேர், வேளாண்மை அலுவலர் பதவிக்கு 105 பேர், வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர் பதவிக்கு 4 பேர், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 176 பேர் என தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

The post வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Selection Commission ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 6,244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு