சப்தகிராம்: மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக புகார் எழுந்த பிறகும் கூட ராஜினாமா செய்யாததால், ஆளுநர் மாளிகைக்குள் இனிமேல் நான் போக மாட்டேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ராஜ்பவனில் பெண் ஒப்பந்த ஊழியரை ஆளுநர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் எழுப்பி உள்ளார். இந்த குற்றச்சாட்டை ஆளுநர் மறுத்து வருகிறார். இந்நிலையில் சப்தகிராமில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஆளுநர் ஆனந்த போஸ் தேவைக்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தினால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார்.
ஆனால் நான் கூறுகிறேன். உங்கள் மிரட்டும் நடவடிக்கை இனி வேலை செய்யாது. போஸ் ஆளுநராக இருக்கும் வரை நான் ராஜ்பவனுக்குள் நுழைய மாட்டேன். அவரை தெருக்களில் சந்திப்பதையே விரும்புகிறேன். அவருக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த பின்னரும் அவர் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது?” என்றார்.
The post பாலியல் புகாரில் சிக்கியதால் ஆளுநர் மாளிகைக்குள் இனி நான் போகவே மாட்டேன்: மே.வங்க முதல்வர் மம்தா அதிரடி appeared first on Dinakaran.