×
Saravana Stores

தேவர் சோலை பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய சாலை திறப்பு

ஊட்டி, மே 11: ஊட்டி மலர் கண்காட்சியை காண கட்டணம் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்திக்குள்ளாகினர். ஊட்டி தாவரவியல் பூங்காவை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து மட்டுமின்றி, உள்ளூரில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதன் மூலம் தோட்டக்கலைத்துறைக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. வழக்கமான கட்டணத்தை காட்டிலும், மலர் கண்காட்சியின் போது சற்று உயர்த்தி கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இம்முறை ஊட்டி மலர் கண்காட்சிைய காண மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. வழக்கமாக பெரியவர்களுக்கு ரூ.50ம், சிறியவர்களுக்கு ரூ.30ம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், நேற்று பெரியவர்களுக்கு ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75ம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.100ம், சிறியவர்களுக்கு ரூ.50ம் வசூலிக்கப்பட்டது. இதனால், 10 பேருக்கு மேற்பட்ட நபர்களை கொண்ட குடும்பத்தினர் மலர் கண்காட்சியை காண ரூ.2 ஆயிரம் வரை செலவிட நேரிட்டது.

இதனால் மலர் கண்காட்சிைய காண வந்த சுற்றுலா பயணிகள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வழக்கம்போல் மலர் கண்காட்சியின் போதும், கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.  சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி கணேஷ் கூறுகையில், நாங்கள் குடும்பத்துடன் 10க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளோம். இங்கு வந்து நுழைவு கட்டணத்தை பார்த்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டோம். மலர் கண்காட்சி நுழைவு கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி மட்டுமின்றி, ரோஜா கண்காட்சியையும் காண சென்றனர். இதனால், அவர்கள் பல ஆயிரம் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டணம் வசூலிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post தேவர் சோலை பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய சாலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Devar Solai ,Ooty ,Ooty Flower Show ,Ooty Botanical Garden ,Devar Solai Municipality ,Dinakaran ,
× RELATED சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை