×

விகேபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

விகேபுரம், மே 11: விகேபுரம் கொட்டாரத்தில் உள்ள ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவி அனிஷா கேத்தரினா 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவிகள் அழகு வித்யா, ஷரிபாரா ஹினா ஆகியோர் 480 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி சசிகலா 479 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பள்ளியில் 450க்கு மேல் 9 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் ஞான செல்வம், முதல்வர் டெய்சி இவாஞ்சலின் ஆகியோர் பாராட்டினர்.

The post விகேபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Vikepuram Andrews School ,Vikepuram ,Andrews Matriculation High School ,Vikepuram Kottaram ,Anisha Katharina ,Akku Vidya ,Sharibara Hina ,Dinakaran ,
× RELATED விகேபுரத்தில் ரூ.3 லட்சம் நகைகள் ெகாள்ளை