×

விகேபுரத்தில் ரூ.3 லட்சம் நகைகள் ெகாள்ளை

விகேபுரம், மே 17: வி.கேபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் மகாலிங்கம் (33). இவர் சங்கரன்கோவிலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர் வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி செந்தில்அன்னை, மகன் சக்தியுடன் அம்பைக்கு தேர்வு எழுத சென்றுவிட்டார். பின்னர் இரவு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து, பீரோவின் மீது வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த செயின், பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட 52 கிராம் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்த மர்ம நபர்கள்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதே நேரம் பீரோவில் மற்றொரு அறையில் இருந்த நகைகள் தப்பியது. இதுகுறித்து மகாலிங்கம் விகேபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post விகேபுரத்தில் ரூ.3 லட்சம் நகைகள் ெகாள்ளை appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Kailasam ,Mahalingam ,Sannathy Street, Vikepuram ,Sankarankovil ,Senthil ,Sakthi ,Ambai ,
× RELATED கடையம் அருகே வெவ்வேறு விபத்து மெக்கானிக் உள்பட இருவர் பலி