- அதானி
- அம்பானி
- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- மோடி
- பி சிதம்பரம்
- புது தில்லி
- முன்னாள் மத்திய அமைச்சர்
- பி. சிதம்பரம்
- சிபிஐ
- டெம்போ
- ஆ. சிதம்பரம்
- தின மலர்
புதுடெல்லி: அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போ நிறைய கறுப்பு பணம் காங்கிரசுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறியது சரியானதுதான் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். தெலங்கானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாஜவுக்கும், அதானி-அம்பானி ஆகியோருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. அதானி, அம்பானி ஆகியோரை பற்றி விமர்சிப்பதை ராகுல் காந்தி,திடீரென நிறுத்தி விட்டார். இருவரிடமும் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன். அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரசுக்கு டெம்போக்கள் நிறைய கறுப்பு பணம் வந்து சேர்ந்து விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தொழிலதிபர்கள், அதானி,அம்பானியிடம் டெம்போவில் பணம் வாங்கிதான் மோடிக்கு பழக்கமா.இது குறித்து, சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றார். இந்நிலையில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் 2 பேரிடம் டெம்போ நிறைய கறுப்பு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரசுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியிருப்பது மிக சீரியஸான குற்றச்சாட்டு. பிரதமரின் வாயில் இருந்து இந்த குற்றசாட்டு வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கோரியிருப்பது சரியானது தான். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜ கட்சி மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
The post காங்கிரசுக்கு அதானி, அம்பானி கறுப்பு பணம் சப்ளையா? மோடி புகார் குறித்து ராகுல் காந்தி விசாரணை கோரியது சரியானது தான்: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.