புனே: மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக மோடி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மோடி, “மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரசுடன் இணைந்து அழிவதற்கு பதிலாக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்து விடுங்கள்” என சரத் பவாருக்கு அறிவுறுத்தி இருந்தார். மோடியின் இந்த பேச்சுக்கு சரத் பவார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து புனேவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “மோடியால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு மற்றும் அதன் தலைமையின் தலையீடு இல்லாமல் இந்த கைது நடவடிக்கைகள் சாத்தியமில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாத எந்தவொரு நபருடனோ, கட்சியுடனோ, கொள்கைகளுடனோ எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்” என்று காட்டமாக தெரிவித்தார்.
The post மோடியால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஜனநாயகத்தை நம்பாதவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன்: சரத் பவார் காட்டமான பதிலடி appeared first on Dinakaran.