×

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 14ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத் தேர்வை கடந்த 27.5.2023 அன்று நடத்தியது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 19.9.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அல்லாத பதவிகளுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கடந்த மாதம் 3ம் தேதி, 4ம் தேதி, 5ம் தேதி, 8ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற்றது.

இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அல்லாத பதவிகளுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 14ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

The post ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 14ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Tamil Nadu Public Personnel Selection Board ,TNPSC ,Integrated Engineering Department ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...