×

செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியிட்டுள்ளனர். www.chennai corporation.gov.in என்ற இணையதளத்தில் செல்லப் பிராணிகள், மற்றும் உரிமையாளரின் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்து ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செல்லப்பிராணிக்கு உரிமம் பெற தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

The post செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Chennai Metropolitan Corporation ,Dinakaran ,
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...