×

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தீவிரம்..!!

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது. ஜெயக்குமாரின் செல்போன் அவரது தோட்ட கிணற்றில் கிடக்கலாம் என்ற அடிப்படையில் கிணற்று நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 14 மணி நேரத்திற்கு மேலாக கிணற்று நீரை நீர் மூழ்கி மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு பணியாளர்களை கொண்டு கிணற்றுக்குள் 7எச்.பி. நீர் மூழ்கி மோட்டாரை இறக்கி கிணற்று நீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. பதினோரு மணி நேரத்திற்கு மேலாகியும் கிணற்று நீரை இன்னும் முழுமையாக வெளியேற்ற முடியவில்லை.

The post நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,Jayakumar ,Nellai ,Nellai Congress ,executive ,Nellai Kang ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம...