×

நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம்!

பீகாரில் வினாத்தாள் கசிந்த இடங்களில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பீகாரில் நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என தெரியவில்லை. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு தேர்வு எழுதியுள்ளனர். நேர்மையாக நீட் எழுதியவர்களுக்கு நீதி கிடைக்க வினாத்தாள் கசிந்த இடங்களில் நீட்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம்! appeared first on Dinakaran.

Tags : Dimuka M. ,NEET ,B. Wilson ,State ,of the ,Union ,Dimuka M. B. Wilson ,State of the Union ,Bihar ,
× RELATED முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக...