கரூர், மே 10: மூன்றாண்டு கால ஆட்சி குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டினை அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றிடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு, குறிப்பாக, ஏழை எளியவர்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள், நாளும் திறம்பட செயல்படுத்தி மக்களின் மனங்களில் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் ஸ்டாலின் நீக்கமற நிறைந்துள்ளார். 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே கையொப்பமிட்ட முத்தான ஐந்து திட்டங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட தனித்துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் உலகமே அஞ்சிய கோவிட் 19 போன்ற பெருந்தொற்று, இயற்கை பேரிடர்களான அதீத கனமழை, இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளில் எல்லாம் மக்களோடு மக்களாக நின்று எந்த நேரமும் மக்கள் நலன் பற்றியே சிந்தனை கொண்டு அந்த மக்களை எந்த வழியிலேனும் ஏற்றம் பெற வைத்திட வேண்டும் என்பதையே லட்சிய மூச்சாக கொண்டு அர்ப்பணிப்புடன் பணி ஆற்றி வரும் மக்களின் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முத்திரைப் பதிக்கும். கடந்த மூன்றாண்டுகளில், தொழிற்துறையில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், ஏற்றுமதியில், கல்வியில், பொருளாதார வளர்ச்சியில், மருத்துவத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உட்புற கட்டமைப்புகளை மேம்படுத்துவதில, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதலிடத்திலும், முன்னணியிலும் தமிழநாட்டை முன்னிறுத்தி, ஏனைய பிற மாநிலங்களை ஏங்க வைத்ததோடு, இந்திய நாட்டையும் வியக்க வைத்து, நான்காம் ஆண்டில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கும் மக்களின் முதல்வரின் ஆட்சியில் நிறைவேற்றியுள்ள எண்ணற்ற திட்டங்களில் முத்தான எட்டு திட்டங்களை பற்றி தமிழ்நாட்டின் திக்கெட்டிலும் உள்ள ஏழை எளியோர், பயனடைந்தோர், உள்ளன்போடு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
கடந்தாண்டு, மிக குறுகிய காலக்கட்டத்திலேயே திட்டத்தின் மூலம் மாநிலம் முழுதும் 2136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இணைய வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுக்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் 10 நாட்கள் தொழில் முனைவு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் வழங்கப்பட்டு 1303 தொழில் முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடி அரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இதில், 288 பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், திட்டத்தின் வாயிலாக 34 நபர்களுக்கு ரூ.2.26 கோடி மானியமாக பெறப்பட்டுள்ளது.
The post பதவி ஏற்ற முதல் எண்ணற்ற சிறப்பு திட்டங்கள்: மக்கள் மனதில் நீக்கமற நிறைந்த முதல்வர்; கரூர் மாவட்ட நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.