- சட்ட சேவைகள் குழு
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
- மாவட்ட சட்டப்பணிகள் குழு
- அவினாசி
- பல்லடம்
- காங்கேயம்
- Tarapuram
- உடுமலை
- மதத்திகுளம்
- உத்திகுளி
- தின மலர்
திருப்பூர், மே 10: திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய வட்ட சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான கடமை சேவை மட்டுமே. இது நிரந்தர பணிக்கானது அல்ல. முற்றிலும் தற்காலிகமானது. அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த கவுரவ ஊதியம் அதாவது நாளொன்றுக்கு ரூ.500 மட்டுமே அளிக்கப்படும்.தன்னார்வ சட்ட பணியாளர்கள் கல்வியறிவு உடையவர்களாகவும், சாதாரணமாக பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்களாகவும், விரிவாக புரிந்துணரும் திறன் உடையவராகவும் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள், அரசியல் சாராத சேவை சார்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள், மகளிர் குழுக்களின் உறுப்பினர்கள், நலிந்தவர்களுக்கான சுயஉதவிக்குழுக்களின் உறுப்பினர்கள், அடிப்படை கல்வி தகுதியுடைய சேவை மனப்பான்மை உள்ளவர்கள் வருகிற 15ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்று முறை தீர்வு மையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருப்பூர் 641604 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.இவர்களுக்கான நேர்காணல் வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, ஏ.டி.ஆர் கட்டிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திருப்பூர் என்ற முகவரியில் நடைபெறும். விண்ணப்பத்தை https://tiruppur.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.