×

விலவூர் பேரூராட்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

குமாரபுரம், மே 10: திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரிமோன் வழிகாட்டுதலின் பேரில், விலவூர் பேரூர் திமுக செயலாளர் பிரைட் சிங் தலைமையில், அதிமுக, அமமுக, தேமுதிக கட்சியினர் உள்பட 70 பேர் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனிஷ், சீமோன், ஜெயசீலன் உள்பட அனைத்து கட்சியினைரையும் அமைச்சர் பாராட்டினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் துரை ராஜ், தானேஷ் குமார், மத்தியாஸ், ஜாண் பென்னட், விலவூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post விலவூர் பேரூராட்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vilavur Municipality ,Kumarapuram ,Rimon ,AIADMK ,AAM ,minister ,Mano Thangaraj ,Vilavur ,Bright Singh ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்