×

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (10ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கடைசி நாள் ஜூன் 7ம் தேதி. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் இருந்தால் itiadmission2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055689 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

The post தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government's Employment and Training Department ,Government Vocational Training Centers ,Private Vocational Training Centers ,Tamil Nadu ,and Training Department ,
× RELATED தொழிற்பயிற்சி நிலையங்களில்...